மருதம் நெல்லி 89.6
எமது மருதம் நெல்லி எஜுகேஷனல் மற்றும் அறக்கட்டளை கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் மூலம் கிராமப்புற மாணவர்களும் எளிதான முறையில் தொழில்நுட்ப கல்வியை பெற்றிட வேண்டும் என்ற நோக்கில், மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியானது துவங்கி தற்போது சேர்மன் திரு. கா கோவிந்த் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது.
அந்த வகையில் எமது கல்லூரியின் மற்றும் ஒரு சேவையாக தர்மபுரி மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் மருதம் நெல்லி சமுதாய வானொலி. இதில் குறிப்பாக பெண்கள், விவசாய பெருமக்கள், படிக்கும் மாணவர்கள், அன்றாட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் இதன் மூலம் சுகாதாரம், கல்வி, விவசாயம், அரசின் நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பு போன்றவற்றில் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றோம்.
அதே வேளையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்திட அவ்வப்போது பொழுதுபோக்கு சார்ந்திட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றோம்.
"இது நம்ம ரேடியோ நமக்கான ரேடியோ" என்ற வாசகத்தோடு மக்களின் தேவையினை அறிந்து அவர்களுக்கான வானொலியாக செயல்படுகின்றது நமது மருதம் நெல்லி சமுதாய வானொலி.
தர்மபுரி மாவட்டத்தின் முதல் சமுதாய வானொலி என்ற பெருமையிணை பெற்றிருக்கின்றது நமது மருதம் நெல்லி சமுதாய வானொலி. மக்களின் தேவையே எங்களின் சேவை.
Marutham Nellie 89.6
Our Marutham Nelli Educational and Trust was started in the year 2008 and with the aim of providing technical education to the rural students in an easy way...
"This is our radio, radio for us," is what our Marutham Nellie Community Radio is doing, understanding the needs of the people and working as a community radio for them.
Our Marutham Nellie Community Radio, the pride of being the first community radio in Dharmapuri district, serves the needs of the people. People's needs are our service.